இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு தோற்றமளிக்கும் மாணவர்கள், தங்களுக்குரிய திகதிகள் மற்றும் நேர அட்டவணைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற, இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை முழுமையாகப் பார்வையிடுமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )