பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார்

பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘பொடி லெசி’ நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஜனித் மதுசங்க எனப்படும் ‘பொடி லெசி’ இன்று (27) அதிகாலை பலத்த பாதுகாப்பு மத்தியிலே நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று அதிகாலை 5.56 மும்பையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL 142 என்ற விமானத்தின் மூலம் அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானம் நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து அவர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரில் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பிலான இரண்டு அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு பயணம் செய்ததாகவும், அவரை இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )