
ஹிக்கடுவையில் பேருந்து–முச்சக்கரவண்டி மோதி விபத்து ; 6 வயது சிறுமி பலி
காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே எதிரே வந்த பேருந்துடன் மோதியதாகவும், இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமான ஓட்டமே விபத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

