கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (27) ஆரம்பமானது .

இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் இலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.

மேலும், கச்சதீவிற்கான படகுச் சேவை குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாததால், யாத்திரிகர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒருவருக்கான ஒருவழி படகு கட்டணம் ரூபா 1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு நாளை (28) காலை உணவு மட்டும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )