ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாள் சலுகை ; அமெரிக்கா அனுமதி

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாள் சலுகை ; அமெரிக்கா அனுமதி

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் சலுகைக் காலத்தை வழங்கியுள்ளது.

இந்த அனுமதி அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அங்கீகாரத்தின் படி, மார்ச் 5, 2026 முதல் இந்தியாவில் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை ஏப்ரல் 3, 2026 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் கடல்சார் சோதனைச் சாவடியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டதும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய எண்ணெய் வயல்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களும் மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் உற்பத்தியை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், அமெரிக்கா வழங்கியுள்ள இந்த தற்காலிக சலுகை இந்தியாவின் முக்கியமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )