
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவங்ச சத்தியாக்கிரக போராட்டம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கல்வி சீர்திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியே இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

