
விமான நிலையத்தில் 2,400 சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை கைது
சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் 56 வயதுடைய இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

