
புத்தளம் – முந்தலில் கோர விபத்து ; 3 பேர் உயிரிழப்பு
புத்தளம், முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

