இலங்கையை அதிக அபாயகரமான நாடாக அறிவித்ததாகக் கூறப்படும் செய்திகளை பொய்யானவை

இலங்கையை அதிக அபாயகரமான நாடாக அறிவித்ததாகக் கூறப்படும் செய்திகளை பொய்யானவை

  • அவுஸ்திரேலியா மறுப்புஇலங்கை, அவுஸ்திரேலியர்களுக்கு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
  • இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ பயண அறிவுறுத்தல் மட்டத்தில்எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
  • துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளுக்கு உத்தியோகபூர்வ ‘Smartraveller’ இணையதளத்தை நம்புமாறு அவுஸ்ரேலியப் பிரஜைகளை உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • சமூக வலைதளங்களில் பரவும் சில செய்திகள், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பயண ஆலோசனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தவறாக சித்தரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • சுற்றுலாப் பயணிகள் எப்போதும் சமீபத்திய வழிகாட்டல்களுக்கு ‘Smartraveller’ தளத்தைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )