500 லீற்றர் மண்ணெண்ணையை சட்டவிரோதமாக பதுக்கிய நபர் கைது

500 லீற்றர் மண்ணெண்ணையை சட்டவிரோதமாக பதுக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே, நேற்றைய முன் தினம் 500 லீற்றருக்கு மேற்பட்ட மண்ணெண்ணையை சட்டவிரோதமாக பதுக்கிய சந்தேக நபரும், அதை பயன்படுத்திய வாகனமும் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் அதிகளவான மண்ணெண்ணையை வியாபார நடவடிக்கைக்காக அல்லது வேறு தேவைக்காக வாகனத்தின் மூலம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகிலிருந்து கடத்த முயன்றதாக தெரிய வருகிறது.

பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று, சம்பவத்தில் ஈடுபட்ட வாகனத்தையும் சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது வாகனமும் மண்ணெண்ணையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட உள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )