இலங்கை உட்பட 3 நாடுகள் இந்தியாவிடம் எரிபொருள் கோரிக்கை

இலங்கை உட்பட 3 நாடுகள் இந்தியாவிடம் எரிபொருள் கோரிக்கை

இலங்கை, வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்காக பெட்ரோலியப் பொருட்களை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த கோரிக்கையை தற்போது மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், அண்டை நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )