
இலங்கை சுகாதார சேவையில் தற்போது 43,553 தாதியர்கள்புதிதாக 2,918 தாதியர்கள்
தற்போது இலங்கையின் சுகாதார சேவையில் 43,553 தாதியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது மொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30 சதவீதமாகும். இருப்பினும், சுகாதார சேவைக்குத் தேவையான தாதியர்களின் எண்ணிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலகத்தரம் வாய்ந்த சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு இன்னும் பெருமளவிலான தாதியர்கள் நாட்டுக்குத் தேவைப்படுவதாகவும், தாதியர் சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் போது முறையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற 2,918 மாணவர்களைத் தாதியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று தாதியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட இந்தப் பிரிவினர் சேவையில் இணையும் போது, நாட்டின் சுகாதார சேவையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
தற்போதைய எண்ணிக்கை: 43,553 தாதியர்கள்.
புதிய இணைவு: 2,918 மாணவர்கள் பயிற்சிக்காகத் தெரிவு.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப தாதியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது .

