ஈரானுடன் எந்தவொரு உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளத் தான் தயாராக இல்லை- டொனால்ட் டிரம்ப்

ஈரானுடன் எந்தவொரு உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளத் தான் தயாராக இல்லை- டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரானுக்கு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளத் தேவை உள்ளது என்றும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால், தற்போது அதனைச் செய்யத் தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த நிபந்தனைகள் என்ன என்பதை வெளிப்படுத்த மறுத்த அமெரிக்க , எந்தவொரு அணுசக்தி அபிலாஷைகளையும் ஈரான் கைவிட வேண்டும் என்ற அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறினார்.

அதேபோல், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகள் எவை என்று பெயரிடவும் அவர் மறுத்துவிட்டார்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய மையமான கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கா முழுமையாக அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப், “வேடிக்கைக்காக” அமெரிக்கா இன்னும் சில முறை அந்தத் நாட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )