
எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை இன்று காலை 6 மணி முதல் நடைமுறையில்ஒவ்வொரு வாகனங்களுக்கும் வழங்கப்படும் எரிபொருள் எவ்வளவு ?
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாலும், கையிருப்பில் உள்ள எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக எரிபொருள் QR குறியீடு (Fuel QR) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவு இன்று (மார்ச் 15) காலை 06:00 மணி முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR குறியீடு இன்றி எரிபொருள் பெற முடியாது.QR குறியீட்டைப் பெறும் வழிமுறைகள்:ஏற்கனவே பதிவு செய்தவர்கள்:உங்களின் வாகன உரிமையாளர் விபரமோ அல்லது தொலைபேசி எண்ணோ மாறவில்லை என்றால், https://fuelpass.gov.lk/ தளத்திற்குச் சென்று உங்கள் பழைய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்யலாம்.
விபரங்கள் மாறியிருந்தால், இன்று காலை 6:00 மணிக்குப் பிறகு புதிய பதிவை மேற்கொள்ள வேண்டும்.
புதிதாகப் பதிவு செய்பவர்கள், :இதுவரை பதிவு செய்யாதவர்கள் அல்லது புதிய வாகனங்களை வாங்கியவர்கள் இன்று காலை 6:00 மணி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லிட்டரில்):பதிவு செய்த பிறகு ஒவ்வொரு வாரமும் உங்கள் வாகன வகைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் அளவு பின்வருமாறு:
வாகன வகை வாராந்த ஒதுக்கீடு (லிட்டர்)
பஸ் (Buses)60 L
மோட்டார் சைக்கிள் (Motorbikes)05 L
வேன் (Vans)40 L
கார் (Cars)15 L
லொறி (Motor Lorries)200 L
காணி வாகனங்கள் (Land Vehicles – டிராக்டர் போன்றவை)25 L
முச்சக்கர வண்டி (Three-wheelers)15 L
விசேட தேவை வாகனங்கள் (Special Purpose)40 L
குவாட்ரிசைக்கிள் (Quadricycles)05 L
குறிப்பு: தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

