
75,064 வாக்குச்சாவடிகளில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியது
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெறுகிறது..
இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
மக்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ள நிலையில், 4,023 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு. திராவிட முன்னேற்றக் கழகம் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி ஆட்சி மாற்றம் நிகழும் இருமுனைத் தேர்தல் கட்டமைப்புக்காக நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் இம்முறை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க ஆகிய காட்சிகள் களமிறங்கியுள்ளன . இதனால் இந்த இம்முறை இந்த 4 கட்சிகளிடையே பலமான போட்டி நிலவுகிறது.
குறிப்பாக நடிகர் விஜய் தீவிர அரசியலில் நுழைந்திருப்பது, 2026 தேர்தலில் யார் வெற்றியாளர் என்று கணிக்க இயலாத நிலையை தோற்றுவித்துள்ளது .
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறைந்தபட்சம் 8 முதல் 10 சதவிகிதம் வரையிலான வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்
மே 4 ஆம் திகதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

