நீலாங்கரையில் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் விஜய்

நீலாங்கரையில் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் விஜய்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான மற்றும் உற்சாகமான சூழலில் நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பொதுமக்களுடன் இணைந்து வரிசையில் நின்று வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீலாங்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள அவர், இதுவரை நடிகராக வாக்களித்து வந்த நிலையில், இம்முறை முதல்வர் வேட்பாளராக முதன்முறையாக தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )