
வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாக கூடிவிட்டு நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
CATEGORIES India

