
உஸ்தாத் பகத் சிங் படத்தின் டிரெய்லர் வெளியானது
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், `உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
CATEGORIES Cinema

