
ஈரான் உயர்மட்ட அதிகாரி அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காட்ஸ் அறிவிப்பு
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அலி லாரிஜானியிடமிருந்து விரைவில் தகவல் வெளியாகும் என ஈரான் நாட்டின் ‘தஸ்னிம்’ மற்றும் ‘மெஹர்’ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், ஈரானிய அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

