லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் எரிவாயு விநியோகத்தை இடையூறின்றி முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்ததாவது, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல்கள் வந்தடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலையான விநியோகம் உறுதிப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

மேலும், நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏப்ரல் மாத இறுதி வரை போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

தற்போது கூடுதல் எரிவாயு இருப்புக்கள் மாலைதீவில் உள்ள சேமிப்பு நிலையங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, அமெரிக்காவிலிருந்து 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் விரைவில் மாலைதீவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே அளவிலான மற்றொரு எரிவாயு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், எந்தவித தடையும் இன்றி விநியோகத்தை தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )