பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று (23) நள்ளிரவு முதல் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலையை ரூ. 10 உயர்த்த முடிவு செய்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 450 கிராம் பாணின் புதிய விலை ரூ. 130 ஆக நிர்ணயிக்கப்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று நள்ளிரவு முதல் அனைத்து பேக்கரிப் பொருட்களின் விலையையும் ரூ. 10 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக இந்த விலை மாற்றம் அவசியமாகியுள்ளது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விளக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )