நாளை மறுதினம் கொழும்பில் நீர்வெட்டு

நாளை மறுதினம் கொழும்பில் நீர்வெட்டு

கொழும்பில் உள்ள சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 10.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. 

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )