ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறினால், இன்று (24) பொதுச் சேவைகள் அனைத்தையும் முன்னெடுக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் வழங்கப்படும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சேவைகள் விரைவில் வழமையான நிலைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )