
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ந்திகதி ஈரான் நாட்டை வான்வழியாக கடுமையாக தாக்கியுள்ளனர்.
ஈரான் பதிலாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வர,பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பும் சர்வதேச ரீதியில் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று, ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து இராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இருப்பினும், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், ஈரான் இந்த ஒத்திவைப்பு குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் விமர்சனத்தில் “எங்கள் எச்சரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மதிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த தாக்குதலை மேற்கொள்வதாக நெதன்யாகு அறிவித்தார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், “அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன், ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்பு உள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களை முறியடித்து வருகிறோம். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பையும் கடுமையாக தாக்குகின்றோம்” என்று தெரிவித்தார்.

