
முதியோர் கொடுப்பனவு மார்ச் 26ஆம் திகதி வழங்கப்படும்
அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு வழங்கப்படும் திகதியை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
கொடுப்பனவு வழங்கப்படும் திகதி: எதிர்வரும் மார்ச் 26, 2026.
70 வயதுக்கு மேற்பட்ட 622,462 பயனாளிகளுக்காக 3,112,310,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட 71,339 பயனாளிகளுக்காக 356,695,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26 ஆம் திகதி முதல் பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும். அன்றைய தினத்திலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
CATEGORIES Sri Lanka

