
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது
சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1,300 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய சீனப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கருவாத்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

