
கனடாவில் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புஎந்த துறைகள் பற்றிய விபரங்களும் அறிவிப்பு
கனடா தனது ‘எக்ஸ்பிரஸ் என்ட்ரி’ (Express Entry) பிரிவின் கீழ், குறிப்பிட்ட சில துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கம் பின்வரும் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளது:
மருத்துவத் துறை: மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு (Health care) பணியாளர்கள்.
அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering) மற்றும் கணிதம் (Mathematics) சார்ந்த நிபுணர்கள்.
தொழிற்கல்வி மற்றும் வர்த்தகம் (Trades): கட்டுமானப் பணிகள் மற்றும் ஏனைய தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள்.
ஆசிரியர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள்.
போக்குவரத்து மற்றும் விநியோகத் துறை சார்ந்த பணியாளர்கள்.
கனடாவில் பணிபுரிந்த அனுபவமுள்ள சிரேஷ்ட முகாமையாளர்கள் (Senior Managers).
பிரெஞ்சு மொழி (French language) புலமை உள்ளவர்களுக்குக் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
பொதுவான தரவரிசைப் புள்ளிகளை மட்டும் சார்ந்திராமல், சந்தையில் நிலவும் தேவையின் அடிப்படையில் குறிப்பிட்டத் திறன் கொண்டவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
கனடாவின் பொதுச் சேவைகளை வலுப்படுத்தவும், அத்தியாவசியத் துறைகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்பவும் இந்தத் திட்டம் உதவும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

