
ஈரானிய தலைவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள “கெஞ்சுகிறார்கள்” நான் அல்ல நாங்கள் தயாராக இருக்கிறோமா என்று தெரியவில்லை,”-ட்ரம்ப் தெரிவிப்பு
ஈரானிய தலைவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள “கெஞ்சுகிறார்கள்” என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் தான் ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறார்கள், நான் அல்ல. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை,” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை தளபதி அலிரேசா தங்சிரி (Alireza Tangsiri), இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளன. எனினும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இதற்கு எவ்வித உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேலின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது “பாதுகாப்பு வலையத்தை” விரிவுபடுத்தி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அபுதாபியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர், மூவர் காயமடைந்துள்ளனர். ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளன.

