
தெற்கு அதிவேக வீதியில் இன்று பயணிகள்பஸ்தீப்பற்றி எரிந்தது ஏன் ? விசாரணைகள் ஆரம்பம்
கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, இன்றுதெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது.
பஸ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே தீப்பற்றத் தொடங்கியதை அடுத்து, அதிலிருந்த பயணிகள் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறினர்.
தீ பரவுவதற்கு முன்பாகவே அனைத்துப் பயணிகளும் ஓட்டுநரும் பாதுகாப்பாக வெளியேறியதால், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் அதிவேக வீதி அதிகாரிகளும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீப்பிடித்ததற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து அதிவேக வீதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

