நீர் விநியோகக் கட்டுப்பாடு குறித்து நீர் வழங்கல் சபையின் அறிவிப்பு

நீர் விநியோகக் கட்டுப்பாடு குறித்து நீர் வழங்கல் சபையின் அறிவிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக,
எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வரை சபையினால் இவ்வாறான நீர் வெட்டு அமல்படுத்தப்படவில்லை.எனினும், நிலவும் வானிலை காரணமாக வரும் நாட்களில் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது கடினமாக இருக்கும்.அம்பத்தலை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும், உயரமான பகுதிகளுக்கு நீர் வழங்குவதில் குறைந்த அழுத்த நிலை (Low pressure) ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும், அதுவரை இருக்கும் நீர் இருப்பை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் சந்தன பண்டார மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைந்த அழுத்தத்தில் நீர் கிடைக்கும் பகுதிகளுக்கு தற்போது நீர்த்தாங்கிகள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )