லீடர் படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியானது

லீடர் படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியானது

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லீடர்.’

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

.ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லீடர் திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 03-ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

லீடர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றளித்துள்ளது. லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், லீடர் திரைப்படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

படத்தின் ஆக்ஷன் டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் டீசர், டீசர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆக்ஷன் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )