
இஸ்ரேலுக்கு ஹௌதி கூறும் நிபந்தனைகள் உடன்படாவிட்டால் பாப் அல்-மண்டேப் நீரிணைமூடப்படுவதாக அறிவிப்பு
யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தற்போது தெற்கு இஸ்ரேலை இலக்காகக் கொண்டு தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காசா பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் சம்மதிக்க வேண்டும் எனவும்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களில் இஸ்ரேல் பங்கேற்கக்கூடாது எனவும் ஹௌதி வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் தமது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக ஹௌதி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக, உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) நீரிணையை மூடுவதற்கு அவர்கள் தயாராகி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

