
இரண்டு – மூன்று வாரங்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் – ட்ரம்ப் அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு உரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான இராணுவ மோதல்களை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இருந்து வெளிவரும் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில், தற்போது ஐந்தாவது வாரமாக நீடிக்கும் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம், அது இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் போரை முடிப்போம் ” எனக் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டியது அவசியமில்லை என அவர் வலியுறுத்தினார்.
ஈரான் விவகாரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக, அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் இந்த முக்கிய கடல் பாதையை பலவந்தமாகத் திறக்க ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவுக்கு உதவத் தயாராகி வருவதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை அமீரகம் கோரியுள்ளது.
அணு ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா முன்னதாக முன்வைத்திருந்தது.
அமெரிக்க சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கோஃபிடமிருந்து நேரடிச் செய்திகள் வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், இவை வெறும் அச்சுறுத்தல்களே தவிர முறையான “பேச்சுவார்த்தைகள்” அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புரட்சிகர இராணுவத்தினர் (Revolutionary Guards), பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராகப் இன்று முதல் புதிய தாக்குதல்களைநடத்துவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
இப்போரினால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் கவனிக்கப்படுகிறது.

