நெருக்கடிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா விருப்பம்

நெருக்கடிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா விருப்பம்

இலங்கையில் நெருக்கடிகள் நிலவினாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்யாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அந்நாட்டின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரமன் மர்ஷாவின் (Raman Marshavin) இந்த உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க ரஷ்யா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கையிருப்புகளை விரைவாக விடுவிப்பதற்கான செயல்முறையை முறைப்படுத்துவதுடன், ரஷ்ய நிறுவனங்களுக்கும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) இடையில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்து தரப்படும்.

இலங்கையின் மின்சாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியை விநியோகிக்கவும் ரஷ்யா தயாராக உள்ளது.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரஷ்ய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பாதையில் இலங்கையின் வெற்றியை காண்பதே தமது நாட்டின் விருப்பம் என ரஷ்யப் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )