
பேட்ரியாட் படத்தின் டிரெய்லர் வெளியானது
மலையாள திரையுலகின் ஜாம்பவான்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம் ‘பேட்ரியாட்’.
இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படம் முதலில் ஏப்ரல் 23ல் வெளியாக இருந்த நிலையில் அண்மையில் திகதி மாற்றப்பட்டு மே 1ந் திகதி திரையரங்குகளில் பேட்ரியாட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Cinema

