
யாழ்ப்பாணத்தில் 4 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் – வட மராட்சியப் பகுதியில் நெடுங்காலமாக போதை மாத்திரைகளை விற்று வந்த 21 வயது இளைஞர் ஒருவரிடமிருந்து, சுமார் 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 520 போதை மாத்திரைகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
CATEGORIES Sri Lanka

