மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு ; ஒருவர் கைது

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு ; ஒருவர் கைது

தம்புள்ளை, வேவலவெவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வேவலவெவ, தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஒருவர் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கியதாலேயே, குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்ததாக சந்தேகிக்கப்படும் 56 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )