புதன்கிழமை விசேட அரச விடுமுறை ரத்து

புதன்கிழமை விசேட அரச விடுமுறை ரத்து

பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவை துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை வழக்கமான அட்டவணைப்படி முன்னெடுக்க முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )