
பதுளை – கொழும்பு பிரதான வீதி புவகஹவெல பகுதியில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து
புவகஹவெலவில் எரிபொருள் நிரப்பப்பட்ட பவுசர் வாகனம் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (07) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பவுசரில் சுமார் 33,000 லீட்டர் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பவுசர் கவிழ்ந்ததில் அதிலிருந்த எரிபொருள் வீதி எங்கும் பரவி ஓடியது. இதன்போது, வீதியில் சிதறிய எரிபொருளைச் சேகரிப்பதற்காகப் பொதுமக்கள் பாத்திரங்களுடன் அவ்விடத்திற்கு வருகை தந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

