முழுமையான வடக்கு ரயில் சேவைஇன்று முதல் ஆரம்பம்

முழுமையான வடக்கு ரயில் சேவைஇன்று முதல் ஆரம்பம்

வடக்கு ரயில் பாதை புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம்அதிவேக ரயில் மற்றும் யாழ்ப்பாணம் இரவு தபால் ரயில் ஆகியன இன்று முதல் இயங்கும் என்றும், யாழ் தேவி ரயில் நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டைத் தாக்கிய தித்வா சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் சேதமடைந்திருந்தன.

அந்த இடங்கள் தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட பின், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்ட போதிலும், ஜனவரி 19 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் அந்தப் பாதையில் ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )