வவுனியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி 56 வயது பெண் உயிரிழப்பு

வவுனியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி 56 வயது பெண் உயிரிழப்பு

வவுனியா – செக்கடிப்புளவு பகுதியில் நேற்று (08) இரவு சகோதரனால் கத்திக்குத்துக்கு இலக்கான 56 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சகோதரர் கத்தியால் தாக்கியதில் கடுமையாக காயமடைந்த அந்த பெண், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான பெண்ணின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )