
மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து ‘பப்பாளி பழமே’ பாடல் வெளியானது
குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017-ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் ‘மீசைய முறுக்கு’.
தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் நேற்று ‘பப்பாளி பழமே’ பாடல் வெளியாகி உள்ளது.
ஆதி இசையமைப்பில் கே.ஆர். தரன் எழுதிய இப்பாடலை ஆதி, கானா வினோத், கானா தரணி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
CATEGORIES Cinema

