
முழு நாடுமே ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ; 786 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று (29) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 786 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்புக் காவல் உத்தரவு பெற்ற 12 பேரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், 781 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் நோக்கில் 14 பேரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை வலுப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

