மின்னல் தாக்கி 23 வயது இளம் பெண் பலி.! மழையில் நனைந்த பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்றபோது விபரீதம்

மின்னல் தாக்கி 23 வயது இளம் பெண் பலி.! மழையில் நனைந்த பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்றபோது விபரீதம்

தாயும் தந்தையும் மழையில் நனைநந்த போது குடை கொடுக்கச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மொனராகலை, வெல்லவாய ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் இந்த துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது .

வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவரது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பெய்த கடும் மழையால், பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்று விட்டு திரும்பி வரும் போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் 23 வயதான இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )