
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடம்பெறாது
ஆட்பதிவு செய்யும் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) முன்னெடுக்கப்பட மாட்டாது என டிஜிட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனைச் சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நபர்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

