
தெதுரு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு -மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு
நிகவெரட்டிய, கொபேய்கனே பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, ததுரு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, காணாமல் போன மேலும் இருவரைத் தேடி விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடவத்தை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், கொபேய்கனேயில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து மொத்தம் 15 பேர் கொண்ட குழுவினர் தெதுரு ஓயாவிற்கு நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

