அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பௌத்த மத நிகழ்வு                                           உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுதல்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பௌத்த மத நிகழ்வு உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுதல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக ஆசீர்வாதம் வேண்டி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி விசேட பௌத்த மத நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசீர்வாதம் வேண்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்காக ஆசீர்வாதம் வேண்டி பௌத்த மத பிரார்த்தனைகள் நடைபெற்றன.

அமெரிக்காவின் பிரதம சங்கநாயக்கரும், மேரிலாண்ட் சர்வதேச பௌத்த விகாரையின் விகாராதிபதியுமான அதிவணக்கத்திற்குரிய கடுகஸ்தோட்ட உபாதரன நாயக்க தேரர் இதில் தலைமை தாங்கினார்.

தேரவாத, மஹாயான மற்றும் வஜ்ராயன மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ட்ரம்பின் போதகராகக் கருதப்படும் திருமதி. பவுலா (Mrs. Paula) என்பவரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேரவாத பௌத்த நடைமுறைகளின்படி உலக அமைதிக்காக ஆசீர்வாதம் செய்ய அமெரிக்க விடுத்த அழைப்பானது, ஒரு இலங்கைப் பிக்கு என்ற ரீதியில் தனக்கும், ஒட்டுமொத்த இலங்கைக்கும் கிடைத்த கௌரவம் என உபாதரன நாயக்க தேரர் தெரிவித்தார்.

அமெரிக்கத் தலைமைத்துவம் இலங்கை மீதும் பௌத்த மதத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கை, மரியாதை மற்றும் அங்கீகாரத்தையே இந்தச் செயல் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )