எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகல் நிலக்கரி ஊழலை மறைப்பதற்கான                                          ‘கண் துடைப்பு’ – ஐக்கிய மக்கள் சக்தி

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகல் நிலக்கரி ஊழலை மறைப்பதற்கான ‘கண் துடைப்பு’ – ஐக்கிய மக்கள் சக்தி

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாக்கள், நிலக்கரி கொள்வனவு மோசடியை மக்களிளிடமிருந்து மறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ‘கண் துடைப்பு’ நடவடிக்கையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலக்கரி மோசடிக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த மோசடிக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அந்த கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரின் இராஜினாமா என்பது வெறும் நாடகம் என்றும், இதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை மறைக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றங்களுக்கு மத்தியில், இத்தகைய நிலக்கரி கொள்வனவு ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )