ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

இன்று சனிக்கிழமை வணிகக் கப்பல்களுக்காக ஹார்முஸ் நீரிணையைத் திறந்துவிட்ட ஈரான் சில மணிநேரங்களிலேயே, அதனை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

கடல்சார் முற்றுகையை நீக்குவதாக அமெரிக்கா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், இந்த நீரிணையை மீண்டும் மூடுவதாக இஸ்லாமிய புரட்சிகர காவற்படை அறிவித்துள்ளது.

முற்றுகை என்ற போர்வையில் அமெரிக்கா தொடர்ந்து கடற்கொள்ளை மற்றும் கடல்சார் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீரிணை இப்போது மீண்டும் ஈரானிய ஆயுதப் படைகளின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து செல்லும் மற்றும் ஈரானுக்கு வரும் கப்பல்களின் சுதந்திரமான பயணத்தை அமெரிக்கா முழுமையாக உறுதிப்படுத்தும் வரை, ஹார்முஸ் நீரிணை மீதான இந்த இறுக்கமான கட்டுப்பாடு தொடரும் என IRGC தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் இந்தத் திடீர் மாற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இது இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்களின் பயணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )