
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.21 ஆகக் குறைந்துள்ளது.
இந்த சர்வதேச விலை மாற்றங்களைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படும் என சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

